என் அண்ணனுக்கு திருமண வாழ்த்து
வாழ்த்து கவிதை சொல்ல
கோடி வார்த்தைதேடி
சொல்ல வந்ததோ ஒரு சில வார்த்தை
அது வார்த்தை அல்ல வாழ்க்கை
அறிவுரை என்னும் போதனை சொல்லி
இலகுவாய் தப்பிப்பது அல்ல வாழ்க்கை
வாழ்ந்து பார் வாழ்க்கை புரியும்
வானையும் அளக்கலாம் வாழ்க்கை எளிதல்ல
சிறகு முளைக்கும் தேடும் வரைக்கும்
கனவை ரசிக்க நமக்கு பிடிக்கும்
வாழ்க்கை கனவு போல் இனிக்கும்
கசக்கும் நிமிடங்கள் சோதனையே
இதுவும் கடந்து போகும்
வாழ்க்கை தத்துவம்
எல்லாம் இனிமையாகும்
என் தத்துவம் வாழ்ந்துபார்
வாழ்க்கை இனிக்க நாளும்