தூது

சின்ன இடை வண்ண உடை
சித்திரம் சொல்வதென்ன
செவ்வரளிப் பூவில் செய்த
மேனி சிணுங்குவதென்ன

கட்டுமரமேறி கடலுக்கு போகையில்
உன்னையும் கூட்டிக் கொண்டு போகவா
கடல் மீன்கள் உண்கண்கொண்டு மயங்கி
வலையில் தானாக வீழாதா

ஒருமுறையில்லை இருமுறையில்லை
ஒவ்வொருமுறையும் தரவேண்டும் முத்தம்
ஊரார்பார்வை திரும்பாவண்ணம்
அது இலாது இருக்கவேண்டும் சத்தம்

புதுபுது கற்பனை புதுபுது சிந்தனை தந்து
பாரில் என்னை உலவவிடு
படர்ந்த உன் கூந்தல் ஈரம் காய வானில்
மேகமில்லா நேரம் உலரவிடு

விட்டம் நோக்கிய வட்டப் பாதையை
சற்றே மாற்றி விடு
வசந்த கால தென்றலாய் வந்து
என்மன வானை வருடி விடு

நீயே சித்தம் நீயே பித்தம்
நீயே எல்லாம்
நீண்ட இரவும் சுருங்கிப் போகும்
நீயென் பக்கம் வந்தால்

அல்லியும் ஆம்பலும் கொண்டு
அழகாய் மெத்தை செய்வேனே
அன்னப் பறவையே அங்கு வந்து
அழகு துயில் கொள்வாயே

எழுதியவர் : சுசீந்திரன். (9-Feb-14, 11:01 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
Tanglish : thootu
பார்வை : 72

மேலே