இன்னும் சொல்லப்படவில்லை

சொல்லப்படாத வேதனையை

ஏட்டில் எழுத முயன்றேன்...



யாருமில்லா வேளையில்

தனித்திருக்கும் போதும்...



ஊர் உறங்கும் சாமத்தில்

விழித்திருக்கும் போதும்...



தலையணையின் மடியில்

முகம் புதைக்கும் போதும்...



குளிக்கும் வெந்நீரில்

கண்ணீர் கரைக்கும் போதும்...



சொல்லப்படாத வேதனையை

ஏட்டில் எழுத முயன்றேன்...



வெறித்திருக்கும் சாலையில்

நடைபோடும் போதும்...



கடவுளின் எதிரே

மொழி மறக்கும் போதும்...



புத்தகத்தின் பக்கங்கள்

திருப்பப்படாத போதும்...



சிரித்து பேசுபவர்களுக்கிடையில்

சிலையாகும் போதும்...



சொல்லப்படாத வேதனையை

ஏட்டில் எழுத முயன்றேன்...



காரணமில்லா காரணத்தால்

வசை வாங்கும் போதும்...



பூ போன்ற மனது

கசக்கப்படும் போதும்...



அடக்கமுடியா துக்கத்திற்கு

அணைகட்டும் போதும்...



தொண்டைக்கு கீழ் இறங்க

உணவு மறுக்கும் போதும்...



சொல்லப்படாத வேதனையை

ஏட்டில் எழுத முயன்றேன்...



கனவில் கூட

கண்கலங்கும் போதும்...



விதியின் விளையாட்டில்

தோற்றுப்போகும் போதும்...



விடையில்லா கேள்விக்கு

விடைதேடும் போதும்...



கண்ணாடியில் என் உருவம்

அந்நியமாகும் போதும்...



சொல்லப்படாத வேதனையை

ஏட்டில் எழுத முயன்றேன்...

எழுதி முடிப்பதற்குள்

மை தீர்ந்து போனது...

தீர்ந்தபாடில்லை,

என் வேதனைகள் மட்டும்...!!!

எழுதியவர் : திவ்யதர்ஷினி (10-Feb-14, 12:11 am)
பார்வை : 67

மேலே