ஒன்று மற்றொன்று
ஒன்று மற்றொன்று
-----------------------------
உழவுக்கு மழைபோல்
உணவுக்கு சுவைபோல்
தாய்க்கு சேய்போல்
தமிழுக்கு குறள் போல்
இசைக்கு தாளம் போல்
மொழிக்கு இலக்கியம் போல்
விண்மீனும் கோளும் போல்
எண்குணமும் இறைவனும் போல்
அவன் படைப்பில் ஒன்றைபின்னி
மற்றொன்று உரு
அந்த ஒன்று இலையெனில்
மற்றொன்று இலையே