அந்தி மழை

பயணங்களின்
போது
பல சமயங்களில்
துணையாக நீ
என்னோடிருந்தாய்

நிறய பேசுவோம்
நிறய கொஞ்சுவோம்
கொஞ்சம்
உன்னுடையதும்
கொஞ்சம்
என்னுடையுதுமாய்
தனித்தனி கதைகள் ..

உன் காதல்
என் காதல் பற்றி
பேசிமுடிந்து
நம் காதலுக்கு வருவோம்
போடா என்பாய்
போடி என்பேன்..

நிறய லவ் யூக்களும்
ஏராளமான
முத்தங்களோடும்..
பாதி இரவை கழிப்போம்
தூக்கம் வருகிறதா
என்று பொய்யாக
கேட்போம் ..

அப்போது நீ கூட
இருந்ததால்
தூக்கம் வரல..
கூட இல்லாததினால்
இப்போதும் தூக்கம்
தொலைகிறது .. ..

நம் பயணங்கள்
தொடர்கதையாக
இல்லாமல்
போனது ...
இருந்தாலும்
பாதைகள்
தொடர்ந்து கொண்டே.. ..

எழுதியவர் : (10-Feb-14, 11:59 am)
சேர்த்தது : M.A.பாண்டி தேவர்
Tanglish : andhi mazhai
பார்வை : 113

மேலே