மீனவன்
கடல் தாயின் தலைமகன் நீ....
கடமை என்னும் சொல்லின் அர்த்தம் நீ...
கடல் கண்டெடுத்த முத்து நீ .....
சத்தமில்லா சாதனையாளன் நீ...
சுழலும் சூறாவளி நீ......
சுறாவுக்கே சவால் விடும் திமிங்கலம் நீ....
உப்பு நீரின் உணர்வு நீ .....
ஞாலத்தின் ஆதி நீ....
ஞாயிறு தேடும் விடியல் நீ....
தன்னலமற்ற தனயன் நீ....
நட்பின் நங்கூரம் நீ......
பாசத்தின் பசிபிக் கடல் நீ.....
மானம் என்னும் உடலின் உயிர் நீ....
வரலாற்றின் சுவடு நீ......
ஓய்வறியா உழைப்பாளன் நீ.....
வாழ்க உன் புகழ் ....