வெறுத்தல் நியாயமாகுமா
நீ வேண்டும் போதெல்லாம்
துணை நின்றேனே - எனை
வெறுத்தல் நியாயமாகுமா..!
நீ செல்லும் பாதையாவிலும்
பக்கம் வந்தேனே - எனை
வெறுத்தல் நியாயமாகுமா..!
பாகுபாடு காட்டும் இவ்வுலகில்
உன்மேல் பகையேதும் இல்லாதிருந்த - எனை
வெறுத்தல் நியாயமாகுமா..!
பலரும் பகைத்திட, சிலரோ நகைத்திட
என்றும் உனை ரசித்த - எனை
வெறுத்தல் நியாயமாகுமா..!
இப்படி உனக்காய் வாழ்கிற எனையும்
உன் காதலுக்காய் கொன்றாயே
இது நியாயமாகுமா..!
அன்றும்
இன்றும்
என்றும்
உன்னோடுதான் என் பயணம்
உனை தொடரும் நிழலாய்.......