புன்னகையோடு உனக்காக…

விழிகள் பொங்கி கொண்டே இருக்கின்றன நீருற்றைப் போல

மலர் இழந்த செடியாய் நீ….

முழுதாய் நீ உணரும் முன்னமே முகம் மறைத்து கொண்டான்

மணம் முடித்த சில தினங்களிலே உன் கரம் விட்டு சென்றான்

வரி வரியாய் வளையல்கள் தந்தான் நீ உடைத்தெறியவா

வகை வகையாய் ஆடைகள் தந்தான் நீ கிழித்தெறியவா

எல்லாம் அள்ளிச் சென்றான் வெறும் நெற்றியையும்
வெள்ளை ஆடையையும் உனக்கு தந்து

உன் வாழ்க்கையின் வசந்தகாலம் அவனோடே
வாரிச் சுருண்டு சென்று விடவில்லை

பார் உன் வீட்டு பூக்களெல்லாம் நீ சூடவில்லை
என்று பரிதாபமாய் நிற்பதை

நீ உன் வீட்டு அடுக்களை தாண்டி வெளியில் வா
சிறிதேனும் உன் நுரையீரல் வெளிக்காற்று நிரப்பட்டும்

நீ ஒன்றும் கற்பிழந்து போகவில்லை கணவனை தான் இழந்திருக்கிறாய்

உன் வாழ்க்கையில் இது முடிவு இல்லை… தற்காலிக நிறுத்தமே…

உன் விழிகளின் சோகம் துடைத்து
இதழ்களில் புன்னகை ஏந்தி வா…

எப்பொழுதும் உன் வீட்டு படிகளில்
புன்னகையோடு பூக்களையும் ஏந்தி காத்திருக்கிறேன்
உனக்காக….

எழுதியவர் : வைகுண்டராமன்.ப (10-Feb-14, 2:40 pm)
பார்வை : 61

மேலே