நல்ல குடும்பம்

"நா இல்லாம எங்க ஆபிஸ்ல
'அணு ' கூட அசையாது..தெரியுமா?"

"ஓ..நல்லா தெரியுமே!அந்த டைபிஸ்ட் பொண்ணு அனு உங்க கூட ஆடி அசைஞ்சி ஊர்
ஊரா சுத்துறது..மத்தவங்க சொல்லி நான் நம்பலை..இன்னக்கி உங்க வாயாலய கேட்டுட்டேன்..இனிமே என்கிட்டே பேசாதிங்க.."

"ஐயோ..அது அந்த அனு இல்லை!"

"ஓ..இன்னொரு அனு வேற இருக்கா?இப்போவே எங்க வீட்டுக்கு போன் பண்றேன்.."

"ஐயோ நா என்ன செய்வேன்.. கத்தாதே.. ப்ளிஸ்.. உனக்கு இப்போ சாந்தி அவசியம்!"

"சாந்தியா?அது யாருய்யா?"

"நீ ஏன் இப்படி யோசிக்கிற?அமைதிக்குதான் அப்படி சொன்னேன்.. உனக்கு தமிழ் தெரியுமா..தெரியாதா?"

"நா எதுக்கு அவள தெரிஞ்சுக்கணும்..சரி..அவ யாரு.. தமிழ்செல்வியா..தமிழ்மணியா..?"

"ஐயோ..மதுரை மீனாட்சி இவகிட்ட இருந்து என்னை காப்பாத்து!"

"அது யா.."
வார்த்தை வெளிவருவதுற்குள் மனைவியின் வாயைவேகமாய் பொத்தினான் அந்த பரிதாப கணவன்.

எழுதியவர் : க வெ சரவணகுமார் (10-Feb-14, 4:41 pm)
சேர்த்தது : SARAVANA KUMAR.K.V.
Tanglish : nalla kudumbam
பார்வை : 245

மேலே