முதல் காதல் நீயே
உள்ளுக்குள்ளே உறவால்,
விதைத்தாய் என்னை........!
உள்ளுக்குள்ளே வைத்து,
வளர்த்தாய் என்னை...........!
பக்குவமாய் பார்த்து,
நடந்தாய் எனக்காய்..........!
பார்த்து, பார்த்து சிறந்ததை
ருசித்தாய் எனக்காய்.........!
பார்க்காமலே கனவுக ளோடு
காதலித்"தாயே"!!!
இமை திறந்து பார்த்தது முதல்
என் "முதல் காதல்" நீயே!

