முழுமை அடைவோம்

நிலையில்லா
வாழ்க்கையில்
நிலை மாறும்
தருணங்கள்........!

எண்ணத்தில்
தோன்றும்
உதயம்
தான்
இதயத்தை
மகிழ்விப்பதும்......
மன்றாட வைப்பதும்....!

தோல்வியும்
சோகமும்
ஏற்படுத்தும்
கனத்தை
விட.....!
கன நேரத்தில்
ஏற்படும்
மரணம்
போதுமானதாக
இருக்கும் என்று
தோன்றுகிறது......!

மற்றவர்
படும்
வேதனையில்
நாம் குளிர்
காயும்போது....
நம்மிடமும்
அந்த
நெருப்பு
வரும் என்று
தெரிய வேண்டும்......!


முழு
மனிதன் தான்
நிலையான
வாழ்க்கை
வாழ்கிறான் ....
ஆனால்
அந்த
முழுமை
அவனுக்கு
மரணத்தில் கூட
அடைந்திருக்கலாம்.....!

போட்டி
பொறாமை
தீங்கு
என்று
எதுவும்
நெருங்க விடாது
முழுமை அடைவோம்....!

எழுதியவர் : (10-Feb-14, 5:03 pm)
சேர்த்தது : தேவராஜ்
பார்வை : 65

மேலே