கார்ப்பரேட் வாழ்கை

உட்கார்ந்தால் புதையும் இருக்கை
கொடைக்கானலை அறைக்குள்
கொண்டுவரும் குளிரூட்டி
கை அருகே சுத்தம் செய்யப்பட்ட குடிநீர்
அளவின்றி கிடைக்கும்
அறுசுவை உணவுகள்
இருபத்துஐந்தில் தொப்பை
முப்பத்துஐந்தில் சொட்டை
ஆசை மனைவியையும் அன்பு குழந்தையையும்
மறக்கடிக்கும் மணிக்கணக்கற்ற வேலை
வாரமிருநாள் விடுப்பு
அடுக்குமாடி குடியிருப்பு
இவையெல்லாம் கிடைக்கும்,
கார்ப்பரேட்களில் வேலை செய்வோருக்கு.
கிடைக்காதது என்னவோ,
கவிதை தலைப்பின் இரண்டாவது வார்த்தை.