மெர்குரி உலகில் பூத்த மெய் மலர்

மெர்குரி உலகில் பூத்த மெய் மலர் நாங்கள்
புதிய உலகை படைத்திடும் வான் நிலா நாங்கள்
விண்ணில் பாயும் எந்திரன் நாங்கள்

தயக்கம் தடைகள் எங்களிடம் இல்லை
வெற்றியின் மந்திரம் பெண்கள் கையில்

கள்ளிப்பால் கொடுக்காத தேசம் இல்லை
இன்று பெண்கள் பற்றி பேசாத மேடையும் இல்லை

கனவுகள் மெய்ப்பட உழைத்திடும் ஜாதி
ஆண்களுக்கு சமமாய் மாறும் மாற்றுச் சக்தி

திக்கித் திரிந்த காலம் மாறி
பாரதி கண்ட பெண்ணாய் எழுந்தோம்

குழந்தை பெற்ற காலம் கழிந்து
உலகை ஆள எழுந்திடும் பீனிக்ஸ் பறவையை ஆனோம்

எங்களை தீண்டிய பார்வை போதும்
ஏளனம் செய்த வார்த்தைகள் போதும்

இரு துருவும் சென்று பூமியை அளந்தோம்
விண்வெளி கடந்து நிலவில் பறந்தோம்
கடலில் குதித்து முத்துக் குளித்தோம்

பெண்கள் சுவாசித்த காற்றில்
வாழும் ஆண்கள் நீங்கள்

தாய்மையின் அருமை உங்களுக்குப் புரிந்தால்
பெண்மையை போற்றும் வீரன் ஆவீர்
தேவதை வாழ்த்தும் மன்னன் ஆவீர்

எழுதியவர் : கண்மணி (10-Feb-14, 10:08 pm)
பார்வை : 295

மேலே