முதல் காதல்

முதல் காதல் :

மாற்றிக்கொண்டோம்
இதயத்தை இசைந்து நம்வசம்,
நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சில் நீங்காத பரவசம்

புதிதாய் பிறந்தது போன்று
உள்ளத்திலே உற்சாகம்,
ஆனால் இம்முறை
இதழில் புன்னகை மட்டும்

கையைப் பிசைந்து கொண்டு
சிவந்த கன்னங்களுடன் வந்த உன்னைப்
பார்க்கமுடியாத வெட்கத்தில்
என்விழிகள் தரைநோக்க

உள்ளத்தில் உணர்ந்தேன் மற்றொரு
உலகில் உறைந்து கிடந்ததை
நினைவிலே ஊஞ்சலாடுகிறது
நீ அளித்த ஸ்பரிசம்

கற்ற வார்த்தைகள்
அனைத்தும் காணாமல் போனது
அருகினில் அமர்ந்த
உன் மௌனத்தின் முன்பாக

எண்ணங்களைப் பரிமாற
எந்த மொழியைக் கையாண்டோம்
என்பது இன்றும் புரியாத புதிர்

காதல் காவியங்கள்
அனைத்தும் கண்முன்னே
நமக்காகப் படைக்கப்பட்டது போல்

சிறகின்றி பறந்தோம்
நினைவுகளின் நிழல்களாக
காதல் வானில்

புன்னகைக்கும் பூக்களையும்
கண்சிமிட்டும் கடிதங்களையும்
கண்டேன் முதன்முதலாய்

காதல் அகராதியில் அன்பாக
வார்த்தைகளைச் சேர்க்கும் பணியில்
நீயும் நானும்

முன்மொழிந்து காட்டிக்கொடுத்தாய்
அன்பிற்கும் உருவம் ஒன்று உண்டு என்பதை!

"முதல் காதலானது
மறக்கப்படுவதுமில்லை
மறைக்கப்படுவதுமில்லை"

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (10-Feb-14, 11:11 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 85

மேலே