கள்வன் நீ

நாணம் மறைத்து நரம்பு
திரண்டுவாகை சூடி நின்ற வயலட்சியை
தேகம் முழுதும் திருநீரிட்டோன்
திமிர்கொண்டு நோக்க
தீது அறியாத நங்கை இவள் “யார்?” என்று வினவ" நீ அறிந்தும் அறிந்திடாத கள்வன் நான்" என்றுரைக்க
“வழி மறிக்கும் மாயோனே, நீ மங்கை என்னை மயக்குவதேன்அறிந்திடாத உணர்வை பிறப்பிப்பதாய் உள்ளதுஉன் கண்கள் என்னை பற்றுகிறது நான்அறிந்தவளாகவும் அறியாதவளாகவும் உறைந்து நிற்கிறேன்உண்மை உணர்வேனோ ??” என்று
மங்கை இவள் மயக்கத்தில் கேட்க
“என் கை பற்றி என் உடன் உலவ பிறந்தவள் நீ” - என்றுரைத்துமாயை நீக்கி மங்கை கண்ணீர் துடைத்து- நீளன்அவளை பற்றி தன் இணை சேர்த்தார்.