ஒருவரி கவிதைகள் - பூவிதழ்

ரசிக்கவில்லை - இழவு வீட்டில் குழந்தைகளின் சிரிப்பை !

நனையவில்லை - கண்ணீரஞ்சலி போஸ்டர் !

இளமை - முதுமையின் தாய் !

தனிமை - பிரிவில் அது கொடுமை !
தனிமை - இணையில் அது இனிமை !

சேமிப்பு - ஆசைகளின் துறவு !

சந்திப்பு - பிரிவின் முயற்சி !

வெற்றி - வியர்வையின் விளைச்சல் !

தோல்வி - முயற்சியில்லாதபோது !

தாய்பால் - கலப்படமில்லை வறுமையிலும் !

தண்டனை - தவறுகளின் பிள்ளை !

மனிதன் - நாளைய பிணம் !

உயிர் - காற்றுள்ளவரை !

காமம் - மனத்தின் வலி கண்ணின் வழியே !

பண்பாடு - இளமையில் கூச்சல் !

காதல் - பருவ காய்ச்சல் !

எழுதியவர் : பூவிதழ் (12-Feb-14, 3:21 pm)
பார்வை : 452

மேலே