காதல்
உன்னை கண்டதில் இருந்து வலைக்குள் சிக்கிய சிலந்தியாய் என் மனம்.
உணவை மறந்து..
கனவில் பறந்து...
இறந்து பிறக்கிறேன்.
நீ பேசிய வார்த்தைகளை சிந்தையில் ஓட்டி தானாக சிரிக்கிறேன்.
தனிமை அறையில் நானாக பேச,
உறவுகளெல்லாம் ஒன்றுகூடி ஏச,
என் வலியின் வழி நீ யென்று
புரிய வையடி எனை சேர்ந்து...