கரிசக்காட்டு காதல்

ஆத்தோரம் வயலோரம்,
ஆரும் இல்லாத நேரம்..
கண்ணால காதல் சொன்ன,
கன்னத்துக்குழி அழகி..

கூத்து மேடயோரம்,
நீ கொஞ்சி பேசுனதும்,
காவக்கார அய்யனாரிடம்-
நாம செஞ்சு வச்ச சத்தியமும்..
வானத்து மழை பொழிஞ்சு,
வண்ணங் கலைஞ்ச கோலமாச்சு..
நேத்து நீ சொன்ன சொல்லுல,
நெஞ்சு குழியெங்கும் ரணமாச்சு..

சாமத்துக் கோடங்கி சொன்னானு,
சட்டுபுட்டுன்னு உனக்கு கல்யாணம் பேச..
காதலெல்லாம் வேணாமுன்னு,
கண்ணு கலங்கி சொன்னவளே..
என் நெனப்ப எல்லாம் அள்ளி,
நெருப்புல போட்டு போனவளே...

நீ போன பின்னும் வீசுதடி நம்ம காதல் வாசம்...

என் கண்ணீருல நனைஞ்சு கெடக்கும்,
கரிசக்காட்டு பூமியெங்கும்......


-புவி

எழுதியவர் : புவி (12-Feb-14, 2:50 pm)
பார்வை : 348

மேலே