நீ + நான் = காதல்

கோயில் சிலைகளெல்லாம்
பொறாமை கொண்டன
நாம் காதலிப்பதை பார்த்து
பறவைகள் நின்று
கேட்டுச்சென்றன
நாம் பேசிக்கொண்டதை
மின்னல் படம்
எடுத்து வைத்துக்கொண்டது
நாம் மழை நேரத்தில்
தேநீர் அருந்தியதை
படுக்கை கூட
நினைவில் வைத்துக்கொண்டன
நாம் கனவு கண்டதை
குழந்தைகள் தான்
நினைவூட்டின
நமக்கு திருமணமாகி விட்டதை
முதுமைதான்
நம்மை சிந்திக்க வைத்தது
நாம் காதலர்கள் என்பதை........