மனைவியைக் காதலிக்க மார்க்கம் தேடி ------- மணியன்

மனைவியைக் காதலி
மார்க்கம் ஒன்று நான் சொல்வேன். . .

மழலையாய் பிறந்தவள்
மனம்போலே திரிந்தவள்
மன்னவன் நீயென்று
பின்னால் வந்தவள். . . .

கற்பனையின் கடிவாளத்தை
கட்டி வைத்து அழகு பார்த்து
கனவு பல கண்டு வந்து
கைபிடித்து உனை அடைந்தாள். . .

என்ன என்ன சிந்தனைகள்
ஏக்கமுடன் வளர்த்தாளோ.
அத்தனையும் மறந்து தானே
சித்தமென உன் குடி புகுந்தாள். . . .

அத்தான் உனக்காக
எத்தனை தவம் இருந்தாள்
சத்தமாக நீ உரைத்தால்
மொத்தமாக கரைவாள் அன்றோ. . .

கூந்தலிலே பூ முடித்தாள்
உந்தனை தன் இதயம் வைத்தாள்
சிந்தனையில் நீ நினைத்தாலும்
பந்தெனவே பறந்து வருவாள். . .

பத்து மாதம் சுமந்து பெற்றாள்
பாசம் மிகு அன்னை உன்னை
பாரம் இன்றி உனை சுமப்பாள்
பாவை அவள் கண் மூடும் வரை. . .

மேதினியில் இட்டாரே பெரியார்
காதினில் தீ இடாமலே கனிந்து பேசு
சூதனமாய் காமனை வெல்ல
தூதுவனே உனக்கு அவள்தான். . .

மங்கையராய் பிறந்து வர
மாதவம் புரிந்து வந்த
மனைவியை மட்டும் காதலி
மார்க்கம் இனி நீயே காண்பாய் . . . . . . .


==== மணியன் =====

எழுதியவர் : மல்லி மணியன் (12-Feb-14, 7:36 pm)
பார்வை : 309

மேலே