திரைப்படம்
வெண்திரைப்படம் - வெறும்
அறைப்படமாகின்றன!.
சில திரைப்படம் - வெறும்
அரைகுறைப்படமாகின்றன!.
ஆடை குறைப்படம் - பிஞ்சுகளை
கருவறுக்கின்றன!
சில மொழிப்படம் - ஆபாசம்
பேசும் படமாகின்றன!
சில கலர்ப் படம் - சிறுசுகளை
இரையாக்கின்றன!
சில புதுப்படம் - இன்று
ஆடம்பரம் பேசுகின்றன!.
கலைப் படம் சில - உதவா
கழைப்படமாகின்றன!
பெரும் படம் பல - மனதை
காயமாக்கின்றன!
சில பொழுது போக்குப்படம்- பொழுதை
பாழாக்கின்றன!
சில கதைப்படம் - குரோதம்
வளர்க்கின்றன!
இனி வரும் படம் - எம்மை
ஒன்று சேர்க்கும் கதைப்படம்
திரைப்படம் இனி நற் குணப்
படமாகட்டும்! ஆகனும்!
எதிர்பார்கனும்!
இல்லை நாமதை வெறுக்கனும்!