தொலைந்து போன காதல்

தொலைந்து போன காதலை நானும்
தொட்டுப் பார்க்க ஆசை பட்டேன் !!
காந்த விழியாள்!!! உன் பார்வை தான்
எனது இதமான இதயத்தை
பதம் பார்த்து விட்டதடி !கண்ணே !
காதல் எனப் பெயர் வைத்தோம் ;
புது மலரின் மணத்துடன் உனைத்
தேடும் தென்றலாய் ...!!நான் ..
நீ இல்லை என்றதும் தூக்கி
வீசும் பெரும்புயலாய் ... ! நான்
சிறகு ஒடிந்த சிட்டுக் குருவியாய்
நான் தேடும் என் தொலைந்து
போன காதல் ...மீண்டும் வருமா ?
உனக்குத் தெரியாமல் என்னுடன்
மட்டும் வருகிறது இரகசியமாய் .....
நான் மட்டும் உன் முகம் கேட்டு
அழும் குழந்தையாய் ! சிறுபிள்ளை
போல் கதறுகிறேன் கண்ணீருடன் !
இமை தேடி விரல் தொட நினைத்தேன் !
இறுதியில் பாதம் மட்டும் பார்த்தேன் !
பாவி ஆனேனடி !நான் பாவி ஆனேனடி !
சிந்தையை சிதைத்தாய் !விழிதனில் வாசித்தாய் !
வாடகை எங்கே என்றேன் நான் ...
உன் கைப் பட்டக் காசு என் உயிரோடு பேசும் !
கொடுத்து விட்டுப் போய் விடு உன் இதயத்தை
நினைவில் நின்று நிம்மதி தருபவளே !
தரை பார்த்து நடக்காதே அன்பே !
உன் மலர் பாதம் பட்டதால்
அந்த மண் கூட மணம் வீசும் !
எல்லை தாண்டி என் மனதை
கொள்ளை கொண்டாய் ! இப்போதோ
எங்கே போய் ஒளிந்து கொண்டாய் !
நமது காதல் நொடிக்கு நொடி
கண் இமைக்கும் கடிகாரம் அல்லவா ?
விதியின் பிடியில் சிக்கி இன்று
தொலைந்து போன காதலாய் நான்
வழிதெரியா நடைபிணமாய்
வலியை எனக்கு வரமாய் தந்தவளே !
உன் நினைவை சுகமாய் சுமக்கிறேன் ;
என் காதல் ஒரு தலைக் காதலா ?சொல் !
உன் தாவணி கொண்டு என்னைத்
தூக்கிலிட்டாலும் கூட நான்
மரணம் என்பதை மறந்து போவேன் !
உயிராய் உணர்வாய் உரசிய காதல்
எல்லை இல்லா அன்பினைத் தந்த
ஏக்கம் தூக்கம் கலைத்தக் காதல்
ஓருயிர் மட்டும் தனித்து நிற்க
வேதனை வேகமாய் பரவி தேடல்
என்பதன் முடிவை வேண்டி
தேடித்தேடித் திரிகின்றேன் நான்
தொலைத்தக் காதலை எண்ணி எண்ணி !!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (13-Feb-14, 7:22 pm)
பார்வை : 108

மேலே