இன்று காதலர் தினம்

காதலர் தினம் .
காதலே! என் காதலே!—நீ
காலமும் வசந்தமே!
வாழ்கவே!நீ வாழ்கவே!—என்
வாழ்வதன் சுகந்தமே!
உயிரிலே!என் உயிரிலே!—நீ
உள்ளொரு துடிப்பிலே!
வாழ்கவே!நீ வாழ்கவே!—என்
வாழ்வெலாம் வாழ்கவே!
உணர்விலே!என் உணர்விலே!—நீ
உயிர்த்திடும் மூச்சிலே!
வாழ்கவே!நீ!வாழ்கவே!—என்
வாழ்வுடன் வாழ்கவே!
நினைவிலே!என் நினைவிலே!—நீ
நிசம் இந்த உலகிலே!
வாழ்கவே!நீ வாழ்கவே!---என்
வாழ்வென வாழ்கவே!
கனவிலே!என் கனவிலே!—நீ
கண் நிறை நிசத்திலே!
வாழ்கவே! நீ!வாழ்கவே!--என்
வாழ்வே!நீ!வாழ்கவே!
காலமே!என் காலமே!—நீ
கவினுறு! கோலமே!
வாழ்கவே!நீ! வாழ்கவே!—என்
வாழ்வினில் வாழ்கவே!
உலகமே!என் உலகமே!—நீ
உண்மையின் வடிவமே!
வாழ்கவே!நீ!வாழ்கவே!—என்
வாழ்முறை வாழ்கவே!
சொர்கமே!என் சொந்தமே!—நீ
சுகம் அருள் பந்தமே!
வாழ்கவே!நீ!வாழ்கவே!—என்
வாழ்நிரை வாழ்கவே!
காதலே! என் காதலே!—நீ
காலமும் வசந்தமே!
வாழ்கவே!நீ வாழ்கவே!—என்
வாழ்வதன் சுகந்தமே!
கொ.பெ.பி.அய்யா.