காதலெனும் அழகிய பாதையில்

காதல்... ! காதல்..!
நினைவுகள்
என்னென்ன ஏராளம்
உணர்வுகள்
அம்மம்மா தாராளம்.
இந்த காதல்
புதிய கற்பனையில்
சாலை அமைக்கும்.
அழகிய பாதையில்
நம்மை நடக்க வைக்கும்.
அன்பே வா..!
யாருமற்ற சாலையில்
நாமிருவர் மட்டுமே
நடந்திடுவோம் வா..!
இருவர் உடலாக
ஒருவரின் உயிராக
கை பிடித்து
மனம் படித்து
கால்கள் நடக்க
கனவுகள் மிதக்க
இன்ப வாழ்வின்
அன்பு கவிதையாய்
நீயும் நானும்
நானும் நீயும்
உனக்குள்
நான் மட்டும்
எனக்குள்
நீ மட்டும்
எழுதிக்கொண்டும்
ரசித்துக்கொண்டும்
வாழ்ந்திடுவோம்
அன்பே வா...!
எந்நாளும் நமக்கு
காதலர் தினம்தான்..!
இந்நாளும் நமக்கு
அந்த தினம்தான்..!