பெண்களைப் போற்றுவோம்
பெண் பத்திரமாகத்தான் இருப்பாள்
இடையூறாய் நீயில்லாதபோது
பெண் சுதந்திரமாய்தான் இருப்பாள்
அடிமையென நீ ஆட்கொள்ளாதபோது
பெண் போற்றும்படிதான் நடப்பாள்
நயவஞ்சகனாய் நீயில்லாதபோது
பெண் வீட்டுக்குள்ளேதான் கிடப்பாள்
மதுக்கடிமையாய் நீயில்லாதபொது
பெண் ஏமாறாமால்தான் இருப்பாள்
ஏமாற்றுக்காரனாய் நீயில்லாதபோது
பெண் அடக்கமாக்தான் இருப்பாள்
அக்கிரமாகாரனாய் நீயில்லாதபோது ...
மென்மையான பெண்மை -உன்
வஞ்சகமான வன்மையிடம்
வசப்படுகிறது வசப்பட வைக்கவே
அன்றாடம் துடிக்கிறாய்
நித்தம் நித்தம் தொடர்கிறாய்
நிதானமான பெண்ணைக்கூட
நிமிர்ந்துப் பார்க்க வைக்கிறாய்
சாதுவான பெண்ணையும்
சாதிக்கதுடிக்க பெண்ணையும்
சம்மதித்தால் காதலைசொல்லி
கொல்கிறாய் இல்லையேல்
கல்லைக்கொண்டு கொல்கிறாய்
காவலனாய் நீ வேண்டாம்
கள்வனாய் இராதே
தமையனாய் நீ வேண்டாம்
தகராறு செய்யாதே ....