கையூட்டே இங்கு கடவுளானது

அச்சடித்த காகிதமே உன்மேல்
அச்சுப்பிழை செய்ததாறோ
பண்டமாற்று காலமதில்
பஞ்சமிருந்ததே அல்லாது பாலும்
இந்த லஞ்சமில்லையே
பாவம் அந்த பாமரன்
பதினாயிரம் கடன் பெறவே
ஈராயிரம் அவன் இழக்கவேண்டும்
இரத்தம் காணும் யுத்தங்கலன்று
இன்றோ பணம்கொண்டு
நடாக்கும் இந்த பனிப்போர்
மூன்றாம் உலகப்போர்
மனிதத்தை உயிரோடு உறைய
செய்யும் வல்லமை இதற்குண்டு
வேடிக்கை என்னவென்றால்
இதை தெரிந்தே செய்பவர் பலர்
வேறு வழியின்றி சிலர்
காரணமெதுவாயினும் கையூட்டு
என்பது கொடியதொரு தொற்றுநோய்
பெற்று பிடிபடுவதும் அதை
கொடுத்து பிடிவிடுவதும் இந்த
கையூட்டில் மட்டுமே சாத்தியம்
அச்சடித்த காகிதமே உன்மேல்
அச்சுப்பிழை செய்ததாறோ,,,,,,,,,


விருப்பமெனும் கையூட்டை விரும்பி,,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்......

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (14-Feb-14, 11:30 pm)
பார்வை : 840

மேலே