தன்னம்பிக்கை சிகரமே
என் மூத்த இளங்ஞனே உழைப்பின்
சிகரமே வெள்ளை கிரீடம் அணிந்து
உயிர்பெற்ற உழைப்பவர் சிலையோ
உன் உடம்பு முழுதும் உழைப்பின் வடு
அதன் வலிகளோடு மனம் வாடாமல்
தொடருமுன் வாழ்க்கை தேடலில்
நெற்றி சுருங்கியும் நேரான பார்வை
கழுத்துத்தின் புடைப்பு சொல்கிறது
காய்ந்த உன் வயிறின் வேதனையை
வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தமாய்
சுட்டுவிரல் பிடித்தவள் நினைவாய்
அவள் மெட்டியினை அணிந்தவாறே
உரம்தந்த மனிதா உரக்கவே சொல்வேன்
வாழ்க்கையின் நம்பிக்கை சிகரமென்று,,
சிகரமே அண்ணாந்து பார்க்கிறேன் ,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.