எழுத்தாளன்

என்னென்னவோ
எண்ணத்தை எழுதி
எப்படி எப்படியோ
உருப்படியாக உருவாகுகிறான்.

இதுவென்று யோசித்து
அதுவென்று சிந்தித்து
மொழியறிந்து எழுதி
வழிவகுத்து கொள்கிறான்

கற்பதை அறிவாக்கி
காண்பதை உவமையாக்கி
கற்பனையை புகுத்தி
ஒப்பனையாக்கி கொள்கிறான்.

பல நூறு
கருக்கொண்டு
பல கோடி
படைப்பு பிள்ளை .
பெற்றெடுக்கிறான்.

-------------------------------------------
சில கைத்தட்டல்களால்
அங்கீகார சிறகுகள்
முளைத்தாலும்
பல முறைகேடுகளால்
அசிங்க சிரமங்கள்
சந்தித்தாலும்
உணர்ச்சி வேகத்தை
கட்டுப்படுத்தி
பக்குவ புத்தியில்
அடங்கியிருப்பவன்
எவனோ அவனே
எழுத்தாளன் என்று
நாளைய சரித்திரத்தில்
எழுதப்படுப்படுவான்.

நானும்
நாளைய சரித்திரத்தில்
என்றேன். சிரித்தார்கள்
சிலர் அப்படித்தான்.......!
சிறுப்புத்திக்காரர்களுக்கு
துருப்பிடித்திருக்கிறது மூளை...!

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (15-Feb-14, 1:07 am)
Tanglish : eluthaalan
பார்வை : 256

மேலே