கொஞ்சமேனும் திருந்தப் பார்ப்பீர் - மணியன்

கொடுத்தாலும் கொடுத்தான்
கோவணத்தை எமக்கு மட்டும். . .
கோட்டையிலே ஆள்கின்றவர்
கோடியிலே புரள்கின்றனர் . . . .
========================================
அன்றாடம் உழைத்த பணம்
அரைவயிறு நிரப்ப வில்லை . . .
திண்டாடித் தெருப் பொறுக்கி
மன்றாடி விழைகின்றனர் . . . . . . .
========================================
என்றாவது ஓர் நாளில்
நன்றாக வருவோம் என்றே
கண்டோமே கனவு எல்லாம்
உண்ட கழிவு போகலையா. . . . .
=======================================
மேடையில் நீர் பேசும் பேச்சு
மேனியெலாம் மயிரின் கூச்சு. .
நாசிக்கில் அடித்தது எல்லாம்
நாவாலா நீரும் கரைத்தீர் . . . . .
=======================================
பெற்றோமா சுதந்திரத்தை
விற்றோமா வெள்ளையனிடம். . .
எம் கையினிலே.தாராமல்
உம் காலடியில் விழவே வைத்தான். . .
=======================================
மன்னவரே ஒன்று உணர்வீர்
மக்கள் மனம் வெதும்ப நீவீர்
பொன்னோடு பொருளும் சேர்த்து
மண்ணோடு மண்ணாய்ப் போவீர். . . .
=======================================
கெஞ்சியேனும் கேட்கின்றோம்
கொஞ்சமேனும் திருந்தப் பார்ப்பீர். . .
மிஞ்சி நீரும் போவீர் ஆனால்
அஞ்சு ஆண்டில் தடுக்கி வீழ்வீர். . . . . .

****** ****** ****** ****** *****

எழுதியவர் : மல்லி மணியன் (15-Feb-14, 12:51 am)
பார்வை : 221

மேலே