எந்தன் முதல் புது உலகம்

வண்ண கனவுகளையும், சந்தோஷங்களையும் தூக்கி திரிந்த கடந்த காலமாகி போனது அது.

இருத்தி வைக்க நினைத்தாலும் இல்லாமல் கடந்து போன காலம் அது!

முதல் பார்வையில் துவங்கி மனதில் கரைந்து போனாய் நினைவாக!!!!

ஒரு முறையாவது நீ என்னிடம் பேசிட என் மனம் கொண்ட போராட்டங்களை யாரும் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை

முதல் முறை உன்னிடம் பேச உந்தன் பதில் ஒரு எழுத்தில் இருந்தாலும் காலம் முழுவதும் நினைத்து கொள்ள கிடைத்த வரம் அது!

நீ அறியாமலே உன் வருத்தங்களுக்கு என் மனம் அதிக வருத்தங்களை பொழிய தவறவில்லை!!

உன் நலம் விசாரிக்க எடுத்த முயற்சியிலும் நீயாக துவங்கி விட என் சந்தோசங்களை இரட்டிப்பாகி விட்டாய்.பேசியது பத்து நிமிடங்கள் என்றாலும் பதிவாகி போனது மனதில்!

இரு நாட்களுக்கு ஒரு முறை என்றாகி துவங்கிய உரையாடல் தினமாகி போக மனதினை அசைக்க துவங்கினாய்

அத்தனைக்கும் மேலாக உன் கிண்டல்கள் கேலிகள் என் வாழ்க்கையின் பொக்கிஷமாகியது

பிரச்சனைகள் உன்னால் துவங்கினாலும் அதன் தீர்வு நீயாகி போக எதை பற்றிய கவலையும் வருவதில்லை எனக்கு!

மிக சிறந்த புரிதல் என்னில் மட்டுமே என்பதை நிரூபிக்க காலம் ஏற்படுத்தி கொடுத்த நிகழ்வு வாழ்க்கை முழுவதும் எனக்கான வலி!

நன்கு அறிந்து நீ உருவாக்கிய காயம் முடியும் வரையும், உன்னால் முடிந்தப்பின்னும் அவை தந்த வலி நீ கனவிலும் அறியாத ஒன்று

நீ ஏற்படுத்திய காயங்களுக்கு நீயே அவ்வப்போது மருந்தாகி போனதே எனக்கான ஆறுதல்

ஆனால் அதன் இடையிலும் உன் விளையாட்டுதனங்கள் நிற்காமல் போனது தான் எனக்கான மிக பெரிய சாபம்.

முழுமையாக உன்னை புரிந்தப்பின் எனக்கான இடம் உன்னில் எது என்பது புரிந்தது

ஒரு நல்ல தோழியாக கூட இடம் பிடிக்காது எனக்கான மிக பெரிய துரதிர்ஷ்டம் தான்

இன்று வரை உன்னில் உன்னுடன் இருந்த 4 வருட பொருட்களில் நானும் ஒன்று தான்.

நானாக என்னை நினைவூட்ட மறந்தால் உன்னில் தொலைந்து போவது நிஜம்

இதுவரை நீயும் காரணமின்றி பேசியது இல்லை நானும் காரணங்களை உருவாக்கி உன்னுடன் பேசாமல் கடந்தது இல்லை

உனக்கு பிடித்த எல்லாம் எனக்கும் பிடித்து இருக்கிறது. உனக்கு என்னை பிடித்து இருந்தால் ஒருவேளை எனக்கே என்னை பிடித்து இருக்கலாம்

அத்தனையும் கனவாகி கடந்து விட்டாய்..... அனைத்தையும் உயிர் கொடுக்கும் நினைவாக்கி சேகரித்து வைத்து இருக்கிறேன்.... நான் வாழ!

எழுதியவர் : மலர் (16-Feb-14, 1:22 pm)
பார்வை : 114

மேலே