என் முதல் பிழை

விழியினில் விழுவது முதல் பிழையா..
இதுவரை மறைந்தது கிடையாதா
முதல் முறை அவளிடம் பார்த்தேன் நான்

பெண் மனம் என்ன படுகுழியா
இதுவரை எழுந்தவன் கிடையாதா
அவளது இதயத்தை கோர்த்தேன் நான்

நொடியில் இதயம்
துடிக்காது ஏன் நின்றது
இருளும் ஒளியும்
பேசாமால் எனை கொன்றது

முதல் காதலை நான் உணர்கிறேன்
புது காலையில் கண் விழிக்கிறேன்
ஒ... மூடனே என்ன தாபமோ
அவள் பார்வையின் தரும் தாக்கமோ

இதழ் பேசிடும் உண் வார்த்தையில்
முடியாமலே கண் சாய்வதா
உன் விழிஎனும் ஓர் சிறையினில்
மீளாமலே நான் போவதா...

எழுதியவர் : கிட்டோ (17-Feb-14, 7:17 pm)
Tanglish : en muthal pizhai
பார்வை : 75

மேலே