சிரிப்பு

இரவு நேரம். தூரத்தில் எங்கோ மணி பதினொன்று அடித்து ஓய்ந்தது. கல்யாணமாகி இன்றோடு இருபது வருஷம் ஆகிவிட்டது. அவள் கண்களை மூடியபடி படுக்கையில் புரண்டு படுத்தாள்.

திடீரென்று அவளுடைய கணவனின் கை அவளுடைய கழுத்தின் பின்புறம் மெதுவாகத் தடவியது. என்ன ஆச்சரியம்! இருந்தாலும் அவள் கண்களைத் திறக்கவில்லை! அவனுடைய கை கழுத்திலிருந்து இப்போது அவளுடைய முதுகை நோக்கி மெல்ல நகர்ந்தது. அவனுடைய மூச்சுக் காற்றை சுலபத்தில் கேட்க முடிந்தது. அவள் பிடிவாதமாக கண்களை மூடியபடி கவனித்தாள்.

அவனுடைய கை இப்போது முதுகைத் தாண்டி அவளுடைய இடுப்பை நெருங்கிவிட்டது. அவளுடைய இதயம் சிலிர்த்தது. இருந்தாலும் கண்ணைத் திறக்கவில்லை. அவனுடைய கையின் பயணம் இன்னும் நிற்கவில்லை. இடுப்பையும் தாண்டி அவளுடைய முழங்கால்களுக்குக் கீழே ஒரு கணம் தயங்கியது. அடுத்த கணம் அவளுடைய பாதங்களுக்கு அடியில் சட்டென்று நகர்ந்தது.

மூடிய இமைகளுக்குள் அவளுடைய கண்கள் பட படத்தன.

அந்த நொடியில் திடீரென்று டிவி உயிர் பெற்றது. "உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முதலாக...!"

"என்னாங்க... என்ன ஆச்சு?"

...

...

...

...

...

...

...

...

"டிவி ரிமோட் கெடச்சுடுச்சு!"

எழுதியவர் : (17-Feb-14, 8:10 pm)
Tanglish : sirippu
பார்வை : 134

மேலே