இருளணைக்கும் வெளிச்சம்
வண்ண வண்ணமாய்
மின்(னும்)மினி பூச்சிகள்
பற்பல வடிவங்களிலும்
இருள் பூமியை அணைக்க
நீயோ அந்த இருளை
அணைத்துக்கொள்கிறாய்,,,
விஞ்ஞான கண்டெடுப்பின்
மகத்தான் பொக்கிஷம்
குடுவைக்குள் அடைபட்ட
குட்டி சூரியன்
ஒரே சொடுக்கிலேயே
உந்தன் உதயமும்
அஸ்தமனமும்,,,
உன்னை ஆட்டிவிட்டால்
அறுந்துவிடும்
டங்ஸ்டன் கம்பியில்
ஊசலாடும் உன்னுயிர்
வாழ்க்கை தத்துவமும்
உன்னில் அடக்கம்
இருக்கும்வரை பிறருக்கு
பிரகாசமாய் ஒளிகொடு,,,
இரவுகள் பல இருளில்
இருந்து எங்களுக்காய்
வெளிச்சம் தந்த என்
***எடிசனே*****
உமக்கு எந்தன்
மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
உங்களோடு நானும் வெளிச்சத்தை நோக்கி ,,
முஹம்மது சகூருதீன்.....