முதன் முதலாய்

முதன் முதலாய்
என் கவிதைகளை
ஆராய தொடங்கியவள்!

எல்லா கவிதையும்
காதல பத்தியே எழுதறியே!

காதல்னா
உனக்கு ரொம்ப பிடிக்குமா?
யார நினச்சு எழுதின?

என் காதலியை தான்!

அது தெரியும்..
யார் அவ?

என்னவள்!

அழகா இருப்பாளோ?

ஓரளவு சுமாரா!

ஓ.. சரி.. நான் கிளம்பறன்!

ஏன்… என்ன அவசரம்?

உனக்கு தான் என்ன பிடிக்காதே!
அப்புறம் நான் எதுக்கு இங்க?

நான் அப்படி ஏதும் சொல்லலையே!

ஓ.. நீ அத வேற சொல்லனுமா?

சொன்னா தானே தெரியும்!

எனக்கு தெரியும் நீ இப்படி தான் சொல்லுவன்னு!

வேறெப்படி சொல்ல?

எனக்கு இப்போ உண்மை தெரியனும்!

என்ன உண்மை?

உனக்கு என்ன பிடிக்குமா பிடிக்காதா?

பிடிக்காமலா
உன்னை பற்றி கவிதை எழுதுகிறேன்?

வெட்கத்தில்
என் கவிதை தொகுப்புகளாள்
தன் முகம் மறைக்கிறாள்.

எழுதியவர் : (18-Feb-14, 9:48 am)
Tanglish : muthan mudhalaai
பார்வை : 144

மேலே