விடியாத பொழுதுகள்

நான் காத்திருக்கிறேன் என்று தெரிந்தும்
என்பால் கவனமில்லை அவனுக்கு
சில்வண்டுகளின் சத்தம் கூட இப்பொழுதெல்லாம்
என் காதுகளில் பேரிரைச்சலாய்
என் கருவிழிகளின் எல்லா காட்சிகளிலும் நிழலாய் அவன்
அவன் கரம் பிடிக்கவே என் விரல்கள் நீளுகின்றன
மூங்கில் காடுகளின் உத்தரவு கேட்டு களிறு உட்புகுவதில்லை
அது போலவே அவனும் என் அனுமதியின்றி
என் இதயம் புகுந்தான்
கருகலைப்பு செய்வது சட்ட விரோதமாம்
அப்படியானல் மனக்கலைப்பு செய்வது…
என் சுவாசக் குழல்கள் முழுவதும் அவன் வாசம்
என் கூந்தல் பூக்கள் வாசம் அவனுக்கு மட்டுமே சொந்தமாய்
என் பெண்மையின் அடையாளங்களை அவன் விழிகளில் தொலைத்தேன்
பருவம் தொட்ட பின் என் உறக்கம் பாதித்த உருவம் அவன்
நான் தினமும் தேடி தொலைகிறேன் என்னுள் அவனை
இன்னும் அவன் நினைவுகளில் என் பொழுதுகள் விடியவே இல்லை…..