தொல்காப்பியத் தமிழ்விடு தூது

ஆறடிக்குள்
இயற்றப்பெற்ற தமிழேடு
பொய்யா மொழிக்கொர்
வெண்பாமாலை - மௌனத்துக்
கதியிலும் ஊறுகின்ற பாற்கடல்

மேதினியில்
எண்பதைத் தொடவிருக்கும்
ஞானத்திரட்டு - இன்னமுதமாய்
எழுபதினுக்கும் மேலும்
வழங்கவிருக்கும் அட்சயப்பாத்திரம்

இலக்கியக் குருதியோடும்
மானுட த் தமிழ்வேதம்
கவிச்சுவைஞர் தனைமறக்கும்
நற்றமிழ் நவரசம் - இதற்கமையத்
திக்கெட்டும் பெருக்கெடுத்த நதிமூலம்

பூவுலகில் பூர்த்தியடையவிருக்கும்
மகாகவி விட்டம் - எதுகையும்
மோனையும் சொரியும்
மரபுத்தென்றல் தவழும் பொதிகை
ஐக்கூப் பிறைகளின் வானம்
கசல்த் தோட்டத்துத் தேன்கூடு

கவியரங்கச் சூரியன்
புதுக்கவி அலைகள் ஓயாப்
பெருங்கடல் - முத்தமிழ்
ஊற்றுக்களின் தீர்த்தம்
கருப்பொருட்கள் செழிக்கும் உரம்

மருதம் நாற்றிசைக்கப்
புனையும் தினணப்பாடல்
சொற்களஞ்சியப் பேழையினின்று
கொட்டும் ரத்தினத் துளிகளின்
பொன்னாபரணம்

புத்தகக்குன்றுகளின்
மலையரசர் - பைந்தமிழ்
மழையின் பெருவெள்ளம்
தமிழ்க் குடியின் தமிழன்பரவர்
தொல்காப்பியத் தமிழ்விடு தூது

எழுதியவர் : புலமி (18-Feb-14, 5:37 pm)
பார்வை : 108

மேலே