கனவில் தோன்றிய கவிதைகள்

உயரப் பறந்தேன் கிளிகளின் மேலே
உடனே வந்தது கவிதை தானே...!!
இறகுகள் ஒவ்வொன்றிலும்
இன்தமிழ் கவிதை
இயற்றியபடியே கூடப் பறந்தேன்.....!!
பருந்தும் பறந்தது என் தலைக்கு மேலே
பழகிக் கொண்டது பைந்தமிழ் கவிதை....!!
பண்போடு பழகியது கிளிகளின் கூடே
பாசத்தோடு கொஞ்சிக் குழாவியபடியே....!!
தமிழைக் கற்றால் நன்னெறி வளரும் எனும்
தன்மை புரிந்தே மகிழ்ந்தது பருந்து......!!
தேசம் கடந்து பறந்து கொண்டிருந்தோம்
தேன் தமிழ் கவிதை தொடர்ந்தபடியே......
ஈபில் டவரின் மேலே அமர்ந்து - பருந்து
என் இனிய கீதம் தமிழ் தாய் வாழ்த்து என்றது
இங்கும் அங்கும் பறந்தபடியே
இனிய தமிழ் வாழ்க வாழ்கவே என்றது......!!
அண்ணாந்து பார்த்த அயல் நாட்டுக் காரன்
ஹவ் ப்யூட்டிபுல் என்றான் உடனே......
நன்றாக இருக்கிறது என்று சொல்லிப் பழகு
நலமாய் தமிழில் அதுவே வழக்கு என்றே
கிளியிடம் கற்ற தமிழை பருந்தும் அனைவருக்கும்
பயிற்றுவிக்கவே தொடங்கிடக் கண்டேன்....!!
விழித்த போதுதான் தெரிந்தது
இந்தக் கனவு......
தமிழ் கார்டூனில்
டப்பிங் பேசியதால் வந்த விளைவு என்று......
ஜஸ்ட் எ மினி
தேர் இஸ் எ கால் பார் மீ........