படிகள் எத்தனை

கண் பார்த்து
மனம் கலந்து
நாம் இணையும் காலம் எங்கே
நம்முறவில் வேலி இங்கே
காற்றுக்கும் இட்டுவிட்டார்
வளர் மதிலாய் நம்பக்கம்
நியாயமில்லை எவரிடமும்
நம்மிடத்தில் நம்பிக்கைமட்டும்
காதலை அறிவார்
நாம் கலப்பதில் குறைவார்
இன்றுபோக நாளை வரும்
நம் காதலுக்கு எத்தனை அடிகளோ
நாம் வாழ்வில் ஒன்றுசேர
இனியும் எத்தனை படிகளோ
-இப்படிக்கு முதல்பக்கம்


எழுதியவர் : கௌரிசங்கர் (13-Feb-11, 7:28 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 300

மேலே