என் அன்பு ஆசிரியைக்கு

மாணவ நெஞ்சத்தை
பறித்து சென்ற
ஆசிரியப் பூவே ..........
பொன்னிலவின் முன்
உன் பூவிழியின்
கண்கள் சுற்றுகின்றதே
கரும்பலகையில் -நீர்
கை வைக்கையில்,
'சாக்பிஸ்'கூட இளகி
நதியாகி போகின்றன
எழுத்து கடலில்,
கருவறையில் உதித்த
எனது பயணத்திற்கு,
வகுப்பறையில் தான்
எனக்கு அர்த்தம் கிடைத்தது ,
தாய் காட்டின அன்பை
நீ காட்டின போது,......
எதை கொண்டு பாடத்திற்கு
வடிவமைத்தீர்கள்?
தங்களின் முகம்
அல்லவா அதில்
தெரிகின்றதே ........
பாடத்திற்கு
அடையாளம் தந்து
எங்கள் ஆசைக்கு
நடை கொடுக்கத்தானே..........................

எழுதியவர் : (19-Feb-14, 7:18 am)
பார்வை : 82

மேலே