ஆணவச்செருக்கா அறிவிழப்பா அறிவாயோ மனமே

அரங்கன் கோவிலிலே
ஆரணங்கு ஓதுகையில்!
பகவலவன் மெதுவாய் துயிலெழுவான்!
பாரெல்லாம் விழித்தெழ!
புல்வெளி படர்பனி கலக்கத்தில்
கண் விழிக்க...!
சோலைகளெல்லாம் முகம் மலர!
பறவையெல்லாம் கீதமிசைக்க...
இருளது விலகிட நான் கண்டேன்.

ஆந்தையின் அலறலும்!
மின்மினி ஒளியும்...
நிசப்தமாய் ஆனதே!
அரியணை ஏறிடு மரசனே!
அகிலத்திற் கொரு தலைவன்!
அதிகாலை விழித்தெழுவானே!
மன்னனை மக்கள் வணங்கிடவே!
மண்ணை வணங்கி பணிந்தானே!!!

சேவகம் செய்வதென் கடனே!
சொல்பவன் ஆதவனே!
அகிலத்தின் ஆண்டவனே
ஆறறிவு மன்னவனே!
சுயநலத்தே ஆர்பாட்டம் கொண்டவனே!
பொதுநலத்தே வந்திங்கு
அறிவாயோ மூட தனத்தை!
அகிலத்தி லொருவன் அவன் சொல்லே
நின் அறிவு குன்றிட செய்திடுமே!
மரணமில்லா மார்கண்டேயன் அவன்!
மண்ணை பணிந்திட!
மண்ணில் புதையும் மனிதா நீ!
விண்ணை ஆள ஆசைகொண்டாய்!!!

எழுதியவர் : கனகரத்தினம் (19-Feb-14, 9:38 am)
பார்வை : 101

மேலே