காதல் சொல்வாயடா

என்னவனே...
கணவனாய் நீ வர விரும்புதே என் இதயம்,
ஆனால்...
கனவினில் மட்டும் வந்து
தொல்லைகள் செய்கிறாயடா ....
ஏதேதோ நினைக்க வைக்கிறாய்...
என் வெட்கம் தனை நீ ஆட்சி செய்கிறாய்...
என் காதலை உரைக்க முயல்வேன்,
ஆனால் பெண் கர்வம் கொள்கிறேன் அவ்வுணர்வினில்...
பித்து பிடிக்க செய்கிறாயடா நீ...
"மெய்யெழுத்து எதுவென கேட்டால்,
காதல் என்கிறேன்..!
உயிரெழுத்து எதுவென கேட்டால்,
என் பெயருடன்
உன் பெயரை இணைத்தே சொல்கிறேன்.."
அரைகுறை வேலைகள் செய்ய வைத்தாயடா,
வெயிலினில் நிழலினை உணர்கிறேனடா...
அனைவரும் இருக்கையில் தனிமையை வேண்டுகிறேன்,
கள்வனே கண்மூடும் வேளையிலும்,
கண் இமைகளை கோவிக்கிறேன்...!
என் கண்ணாடி பிம்பத்தினை
நானே ரசிக்கிறேன்,
என்னை நீ ரசித்திட...!
ஏக்கங்கள் என்னுள் புதைத்து...
என் காதல் தாகத்தினை அதிகரித்து...
கண்ணாளனே உனக்காக
காத்துக்கிடக்கிறேன் நான்....
மனம் கவர்ந்த கள்வனே,
உன் காதலை உரைத்து
என்னை மனம் முடித்து கொள்வாயே
இல்லை....
இன்னும் சிறிது காலம்
என்னை தவிக்க விட்டு ரசிப்பாயா....!?!!