சிலை என்றேன் அசையாது நின்றாள்
கிணத்தில் தெரிந்தது
வானத்து நிலவு
நீர் இறைப்பதை
நிறுத்தி விட்டேன்
காட்சி
கலைந்துவிடக் கூடாதென்று ...
தோட்டத்தில் பூக்கள்
பூத்திருந்தன
பூக்களை பறிப்பதை
நிறுத்தி விட்டேன்
மலர்க் காட்சி
மறைந்து விடக் கூடாதென்று....
தோட்டத்தில் அவள்
நடந்து வந்தாள்
சிலை என்றேன்
அழகுடன் அவள் அசையாது நின்றாள்
அழகின் தரிசனம்
ஆனந்தம்
அழகு எனக்கு ஆராதனை !
~~~கல்பனா பாரதி~~~