இரட்டைக் கொலை – malar1991
தமிழை நோகடித்து
மொழிக் கொலை செய்திட
அரைகுறை ஆங்கிலத்தை
அழகாகக் கற்றுக் கொள்ள
ஊடக உரையாடல் போதும்.
கல்லார்க்கும் கற்றவர்க்கும்
வேறுபாடு இல்லா நிலை,
சிற்றூர்களும் தப்பவில்லை
மொழிச்சீரழிவு மோகத்திற்கு.
எழுத்தறிவு இல்லாதவரும்
இனியதம் மொழியினையும்
சிதைக்கின்ற பாழும்நிலை.
கெடுத்துப் பொருள் சேர்ப்போர்க்கு
புதுமைகள் பலவிதம்.
இருமொழிகள் சீரழிய
என்னென்ன முயற்சிகள்!
இதன்பேரோ இரட்டைக் கொலை?
(படம்: தமிழ் மொழிக்கும் பொருந்தும்)