உங்களைப் போலவே
எல்லாவற்றிற்கும்
ஏதாவதொரு
சாத்தியம் உண்டு....
காரணம் தெரிய
விரும்பாததே,
சாக்கடை கூட
அல்ல முடியாமல்
கொசு வளர்ப்பதும்
கொசுக்கள்
தன் சிசு வளர்ப்பதும்......
அருகில் வந்தமர்ந்து
உற்று பார்க்கும்
அமானுஷ்யங்களின்
விரல்களிலும் கருப்பு மை.....
புகார் அளிக்க
முற்பட்டபோது,
பத்து விரல்களிலும்
கருப்பு மையோடு
காட்சி தந்தார் கடவுள்......
கேட்காமலே புரிந்தது
குழப்பம்.
தீயவை தானே அழியும்
தீயை வைக்கும் பார்வையில்
பணம் எரிகிறது....
கூட,
பணமில்லாதவன்
வயிறும் எரிகிறது......
பகுத்தறிவு, பேய்கள்,
சாமிகள், சாங்கியங்கள்
எதுவுமே ஒன்றும்
செய்யமுடியவில்லை....
நிறைந்து வழியும்
பணப் பெட்டிகளை
மறைக்க
ஒரு ஊர்
இருக்கத்தான் செய்கிறது.....
எல்லாம் சாத்தியம்
என்பதை
எப்படித்தான் பார்ப்பது?
மூன்றாம் உலகப் போரிலா?
இரண்டு போரிலும்
செத்தவர்களின் ஆத்மா
வழியெங்கும்
படுத்துக் கிடப்பதை உணர,
வீட்டுக்கு
ஒரு கல்லறை வளருங்கள்
அல்லது
கல்லறையில் குடியேறுங்கள்
எங்களை போல.....
நாங்கள் உருவமற்றவர்கள்
உங்களைப் போலவே.....