கரிசல் மண்ணில் ஒரு காவியம்—12

கரிசல் மண்ணில் ஓர் காவியம்...12
அத்தியாயம்—12
கமலாவுக்குள் பாரதி குடியேறிவிட்டான்.அவளுடைய நம்பிக்கை,தெளிவு,தீர்வு,அறிவு,பலம் என அத்தனை சக்திகளும் பன்மடங்காய் பெருகி அவள் ஒரு மகா சக்தியாக உருவெடுத்தாள்.இனி என்னுடைய எதிர் காலத்தை நான்தான் தீர்மானிப்பேன். எனக்கும் அறிவு இருக்கிறது.என்னுடைய உரிமைகளைத் தடுக்க எவருக்கும் அதிகாரம் இல்லை.நான் எதை அடைய வேண்டுமென முடிவெடுக்கிறேன் என்பது என்னுடையது.என எண்ணியவாறு சட்டென்று எழுந்தவள் அடைத்து வைக்கப்பட்ட ஜன்னல் கதவுகளைத் திறந்தாள்.வெளி உலக வெளிச்சம் அவள் கண்களில் பிரகாசித்தது.இருண்டு கிடந்த உள்ளறையில் ஒளி பரவி அவளுடைய உருவத்தை ஜன்னல் கம்பிகளைத் தாண்டி சுவாசிக்கச் செய்தது.
கைகள் கட்டப்பட்டு அடங்கிக்கிடப்பது போன்ற நிலை மாறி இதுவரை இல்லாத ஒரு புது உத்வேகம் அவளுக்குள் ஏற்பட்டது.அது அவளுக்கு அதிசயமாகவும் தைரியம் சொல்லும் ஊக்கமாகவும் இருந்தது.ஜன்னலுக்கு வெளியே தேடிய கண்கள் ~எங்கே ராஜாவைக்காணோம்~ என அங்கும் இங்கும் எட்டி எட்டித் தேடின.வழக்கம்போல் ஒரு பாட்டு ஒண்ணு பாடுவாளே.அதை அன்றும் பாடுகிறாள்.
கண்ணா கருமை நிறக் கண்ணா .....உனைக்காணாத கண்ணில்லையே.”அப்போது அவன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உள்ள ஒரு மா மரத்தின் கிளையில் படுத்து தன் சிந்தனையில் என்றோ ஒருநாள் பள்ளியில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றினை எண்ணி தனக்குள் அசை போட்டுக்கொண்டிருந்தான்.பள்ளிக்கு ஒரு நாள் செல்லும்போது இலேசாக பின் புறத்தில் கிழிந்திருந்த சின்ன ஓட்டையுள்ள தனது கால்ச்சட்டையை அணிந்து சென்றிருந்தான்.தேடிப்பார்த்தும் அன்று அவனுக்குக் கிடைத்த டவுசர் அதுதான்.வறுமையின் அடையாளமும் அதுதான்.அதைக்கண்ட சக மாணவர்கள் அவனைப்பார்த்துக் கேலி செய்தனர்.`ஓட்டைக் குண்டிப் பயடா இவன் “ என நக்கலாக அவனைப்பார்த்துச் சிரித்தனர்.அந்தக் குறும்புக்கார மாணவர்களில் ஒருவன் அந்தக்கிழிந்த ஓட்டையில் விரலைவிட்டு இழுத்து ஓட்டையைப் பெருசாக்கிவிட்டான்.
வீட்டில் மாற்றிக்கொள்வதற்கு வேறு சட்டையும் இல்லை.பின்னால் டவுசரை திரும்பிப்பார்த்தான்.ஓட்டை பெரிதாகி கிழிந்து தொங்கியது.ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது “டேய் ஏண்டா என்டவுசரக் கிழிச்ச” என சற்று ஓங்கிய குரலில் கேட்டான்.அதற்கு அந்த மாணவன் “அப்படிதாண்டா கிழிப்பேன்.நீ ஓட்டக்குண்டியா வந்தா கிழிக்காமலா இருப்போம்”என ராஜாவின் எரிச்சலை தூண்டும் விதமாகவே பேசினான்.இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த கமலா வேகமாக வந்து “பாவண்டா ராஜா.அவங்க ரொம்ப ஏழடா.வேற சட்ட இருந்தா போட்டுக்கிட்டு வரமாட்டானா?ஏண்டா இப்படிச்செஞ்சே”என இரக்கப்பட்ட குரலில் கேட்டாள்”
நீ என்ன அவனுக்கு சப்போட்டா?இது அவனுக்கு எனக்கும் உள்ள பிரச்சன எடையில நீ எதுக்கு வார.என பேசிக்கொண்டே அவளைத் தள்ளிவிட்டான் அந்த சேட்டைக்கார சிறுவன்.அதைக்கண்ட ராஜாவிற்கு வேகம் பொத்துக்கொண்டு கிளம்பியது.அதுவரை பேச்சாகப் பொறுமையிலேயே பேசிக்க்கொண்டிருந்தவன் அதிரடியாக அந்த வம்புக்காரனின் சட்டையை எட்டிப்பிடித்தான் ‘டேய் ”சண்டைக்கு வாறதா இருந்தா எங்கூட வாடா கமலாவ ஏண்டா தள்ளிவிட்ட.”என ”அவனைப் பிடித்து இவன் தள்ளினான்.இப்படியே சண்டை வளர்வதைக்கண்ட கமலா அழுதுகொண்டே சென்று ஆசிரியரிடம் முறையிட்டாள்`ஆசிரியர் அந்த சிறுவனைக் கண்டித்து முட்டி போடச்சொன்னார்.அன்று இந்த ராஜாவுக்காக அந்தப் பயலிடம் எம்புட்டுக் கோபபட்டாள் என்பதை அவள் இவன் மீது வைத்திருந்த அன்பாக எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தான்.அந்த வேளையில் இந்த பாட்டும் அவனிடம் போயச்சர்ந்தது.
படீரெனத் துள்ளி எழுந்தான்.அவன் படுத்திருந்தது ஒரு சிறு மரக்கிளை என்பதையும் மறந்தான்.பாவம் சம நிலை சமாளிக்க முடியாமல் பொத்தெனக் கீழே விழுந்தான்.மரக்கிளையின் குச்சி ஒன்று குத்தி இலேசான சிராய்ப்பு.ரத்தம் எட்டிப்பார்த்தது.ஆனாலும் அதை அவன் கண்டுக்கொள்ளவில்லை.ஜன்னல் பக்கமாக ஓடினான்.இவன் ஓட ஓட பாட்டும் இவனை வாடா வாடா என அவ்வசரப்படுத்துவதுபோல் இருந்தது,தவித்து இளைத்து ஜன்னலைக் கண்டு நின்றான்.அவள் இவனைக்கண்டதும் இன்னும் பாட்டின் விசையைக்கூட்டி உன்னைத் தேடித்தானடா இந்தப்பாட்டு என்பதுபோல் அழுத்திப் பாடினாள்.பார்த்த பின்னும் பாட்டு நிற்கவில்லை.மகுடி கண்டு மயங்கிய நாகத்தைப்போல் தன்னை மறந்தவனாய் இது நிசந்தானா என்பதுபோல் வியந்தவனாய் உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்ட சிலையாகி நின்றான்.
அப்போதும் அவள் பாடிக்கொண்டுதான் தொடர்கிறாள்.பேச்சை அவன் ஆரம்பிக்கிறானா என கால அவகாசம் கொடுக்கிறாளா?இல்லை பரிட்சிக்கிறாளா?அவள் இதழ்கள் பாட்டை வாசித்தாலும் அவள் இதயம் அவளுக்குள் அழுகிறது.அதை அவள் கண்கள் கண்ணீரால் சொல்கிறது.பாடிக்கொண்டே அவனைப்பார்க்கிறாள்.இத்தனை நாளும் நானும் உன்னைத் தேடாமலில்லை.என்பதைக்கூறுவதுபோல் தன் விழிகள் உதிர்க்கும் துளிகளை தன் முந்தானையால் துடைக்கிறாள்.என்னை நீயும் நினைத்தாயா என விசாரிப்பது போன்று பாட்டை நிறுத்திவிட்டு இமை தட்டாது அவள் அவனை நோக்கும்போது அவள் கண்கள் நீருக்குள் மீன்களாய் நீந்துகின்றன.அம்மீன்கள் துள்ளும்போது சிதறும் நீர்த் திவளைகளாய் அவள் தன் சுட்டு விரல்களால் சுண்டிவிடும் கண்ணீர்த்துளிகள் இவன் மீது படுகின்றன.பிரிந்தவர் கூடினால் பேசவும் கூடுமோ என்பதுபோல் இருவரும் கண்களாலேயே நலம் விசாரித்துக்கொண்டு அசையா ஓவியம் போல் பேச வார்த்தைகளை மௌனமாக தங்கள் சிந்தையில் தேடுகிறார்கள்.இப்போது யார் முதலில் தொடர்வது.
அந்த வகையில் ஆண்கள் பொறுமையை இழந்தவர்கள்தான்.அதுதானே ஆண்மை.பெண்கள் இந்தவகையில் முந்துவதும் அவ்வளவாக ரசனை இருக்காது,அதனாலும் பெண் புத்தி பின் புத்தி என்பரோ!ஆனாலும் அதுதானே பெண்மையின் அழகும் தனிச்சிறபபும்.பெண்மை என்பதே மென்மைதானே.அதனால் இப்படிப்பட்ட சிக்கலான தருணங்களில் அவர்களுக்கு அழுதுவிடுவதே மிகவும் எளிமையாகிவிடுகிறது.
கமலா.............................................~!என சொல்லும் போது அவன் உதடுகள் துடிக்கின்றன கண்கள் கலங்குகின்றன.அவனையும் மீறி அழுகின்றன.வார்த்தைகள் வரிசையில் வரத் தடுமாற்றம் அடைகின்றன.இருந்தாலும் இழுத்து வந்து நிறுத்தப் போராடுகின்றான்.சொற்கள் கோர்வைக்குள் வரத் தயங்கி தனித் தனியே ஒவ்வொன்றாக இடைவெளி விட்டு சேர்ந்து வரச்சிரமப் படுகின்றன.ஆனாலும் சமாளிக்கிறான்.
மீண்டும் ஆரம்பிக்கிறான் கமலா.......!ஏம்மேலே உனக்குக் கோபமா?அன்னைக்கு ஆச்சி...........என இழுத்து மேலும் தொடர்வதற்கு சிரமப்பட்டு அழுகிறான்.இப்பொழுது கமலா வாய் திறக்கிறாள்..
‘‘எல்லாம் எனக்குத் தெரியும்.அன்னிக்கு ஆச்சி மேலத்தான் தப்பு.எங்க அப்பா கூட ஆச்சியத்தான் திட்டுனாரு.ஆச்சி அப்படித்தான்.பாவம்!நீயும் உங்க அம்மாவும்........சரி...சரி...அழாதே.........அதான்....நாங் இப்போ பேசிட்டேங்ல்ல.அப்பொறம்என்ன? டேய் ராஜா நீ எனக்கு ஒரு உதவி செய்வீயா?
“உதவியா......என்ன செயனும்?சொல்லு சொல்லு!.எங்க அம்மாகூட உங்கூடப் பேசுறது தப்புண்ணுதாங் திட்டுறா.நீ என்னமோ வயசுக்கு வந்துட்டயாமே.வயசுக்கு வந்த பொண்ணுங்கிட்ட ஆம்பளப் பசங்க பேசுனா தப்பாமே!எனக் கிறுக்குத்தனமாக உளறினான் ராஜா.
சீ...ப்....போடா மடையா......இனிமே நாம யாருக்கும் பயப்பட வேண்டியதே இல்ல......ஆமாண்டா நானும் பள்ளிக்கூடம் வர்ப்போரேங்.....+2 பரிச்ச வருதுல்ல,.......படிக்கனும்ல்ல..என சகசமாகவே கமலா கூறினாள்`
அப்போ பள்ளிக்கூடம் வருவியா?நிசமாவா?........எனச்சந்தோஷதில் ஆச்சர்யப்பட்டான் ராஜா.
ஹூம்....... அதனாலதான் நீ எனக்கு ஒரு உதவி செய்ணும்.
நாங் என்ன கமலா செய்ணும்.
“ஆமா ....நம்ம சாரட்ட சொல்லி எங்க அப்பாட்ட பேசச்சொல்லனும்.சார் சொன்னா எங்க அப்பா கேப்பாரு.”
‘கேப்பாரா’``````````````/?என வடிவேல் குரலில் பேசினான் ராஜா.
இப்போது கமலா கல கல வென சிரித்தாள்`கமலா சிரித்ததும்ராஜாவும் சிரித்தான். சோகம் மாறியது.
சுந்தரம் தொடர்கிறது.
(தொடரும்)

கொ.பெ,பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (21-Feb-14, 3:11 am)
பார்வை : 239

மேலே