மாஞ்சோலைதனில்

மாஞ்சோலைதனில்
பூஞ்சிட்டுக்கள்
ஊஞ்சலாட ....

செஞ்சருகுதிர்ந்து
பஞ்சணையாய்
மஞ்சம் போட ....

பாஞ்சலம்வீச
விஞ்சுமளவு
பிஞ்சுகொட்ட ....

இஞ்சிஇடுப்பில்
காஞ்சிப்பட்டுடுத்தி
வஞ்சிவந்திட ....

கெஞ்சும்விழியாள்
கொஞ்சும்மொழியால்
நெஞ்சம்கவர ....

மஞ்சுகுமரி
பிஞ்சுதின்ன
நெஞ்சழிய .....

மொஞ்சிவிம்ம
செஞ்சாந்துவடிய
குஞ்சித்துகுதிக்க .....

பைஞ்சேறுவழுக்க
சஞ்சலத்தால்
அஞ்சினளே .....!!


பாஞ்சலம் -காற்று
மொஞ்சி -மார்பு
குஞ்சித்து -கால் தூக்கி வளைத்து
பைஞ்சேறு -சாணம்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (21-Feb-14, 9:14 am)
பார்வை : 135

மேலே