பயம்

நீண்ட நாளுக்குப் பின்
ஊருக்குள் நான்

வலதுகை பாரமது
பெட்டிவழி
இடதுகை பாரமது
பையின்வழி

போகும் வழியிலே
கனவுகள் தான்
தெறித்து விடுகின்ற
நிறங்களைத் தான்

கண்கள் உள்வாங்கி
வெளிவிட்டதே
வாயின் வழியாக
சிரிப்பலையாய்

எண்ணி எண்ணி
மனம் மகிழ்ச்சியிலே
துள்ளி கொண்டு
கால் நடக்கையிலே

பகலும் அது
தூங்கி பாதியானதாய்
இரவு அது
விழித்து பாதியானதாய்

வீதி ஆரம்பத்தில்
நான்
வீதி நடுவினில்
எதிரி

கையில் ஆயுதம்
ஏதுமின்றி
கம்பீரமாய் எதிரி
நிற்பதையே

கண்ட தூரமது
கணக்கு இல்லை
கால்கள் என்னிரண்டும்
நடுங்கிடவே

சாதி சனமதை
கூப்பிடவும்
திரானியில்லை
என் குரல்களிலே

நல்ல வேளையாய்
பிழைத்து விட்டேன்
வீதி ஆரம்பத்தின்
ஓரத்திலே
அமர்ந்து கொண்டே நான்
விடியும் வரை
******************************* ***************** *******
பேயைக் காணாமலே
பயம்
நாயைக் கண்டதுமே
பயம்
******************************* ***************** *******

எழுதியவர் : உமர்ஷெரிப் (21-Feb-14, 9:37 am)
சேர்த்தது : உமர்
Tanglish : bayam
பார்வை : 315

மேலே