அவர்கள் இன்னும் அப்படியே

அவள் பார்வை தவறி வீழ்ந்துவிட்டதாய்
என்னை ஆழக்கினற்றுக்குள் இறக்குகிறாள்
நீரும் அதில் நீந்துவதும் எனக்கு சாதாரணம்
மூழ்கியிருக்கும் பொழுதுகளில் எனதுயிரைக்குடிக்க முனைந்து
அது தோற்றுப்போயிருக்கிறது

கறைபடிந்த ஓர் வாழ்வு, கழுத்து நெரித்து கொல்லப்பட்ட ஒரு காதல்
குழந்தைகளுக்கு கொடுக்கப்படாத சந்தோசம்
இவை கிணற்றின் அடிச்சேற்றில் கிடந்தவை

நான் அழுது கொண்டேன் சில நேரங்களில் மட்டும் சிரித்துக்கொண்டேன் கிணற்றுக்குகுள்
என் செயல்களை அங்கு யாரும் கண்டதில்லை

பார்வை கிடைக்கவில்லையெனில் கிணற்றின் கண்கள் வழியாக
நிலத்தினுள் சென்று தேடுவதே எனது எண்ணம் .

கண்கள் விரிந்த போது நான் நிலத்தினுள் சென்றேன் ....

திருமணத்திற்கு பெற்ற கடனை கொடுக்கமுடியாமல் சில மனிதர்கள் அழுது கொண்டிருந்தனர்
சில உடல்கள் காயப்பட்டிருந்தன தீயால்
இன்னும் சில மனிதர்களால் ..
வியர்வை நாற்றம் வீச சிலர் உறங்கிக்கொண்டிருந்தார்கள்

தோற்றுப்போனவர்கள் அவர்கள் என்றார் நிலத்துச்சொந்தக்காரர்

அங்கு பார்வை இல்லை .

வெளியேறும் போது , அது கரைந்து மிதந்தது.

எழுதியவர் : அஹ்மத் ஜஹான் (22-Feb-14, 12:31 pm)
சேர்த்தது : JAHAN POTTUVIL
பார்வை : 46

மேலே