இயற்கையின் இனிய விருந்து
தலை வாழை இலை போட்டது
எழிலாக பசும் புல்வெளி.....
வெண் மயில் பரிமாறியது
பால் பாயசம் தன் தோகை வழி....
வறுத்த முந்திரிப் பருப்பெனவே
வந்து பறந்தது பட்டாம்பூச்சி.....
நொறுக்கிக் கொள்ள அப்பளமாய்
நெருங்கிக் கிடந்த காலை வெயில்....
எங்கே பூந்தி கொஞ்சம் தூவு....
மின்மினிப் பூச்சியே கொஞ்சம் மேனி மினுக்கு..!!
எனக்கு மட்டுமில்லை இந்த இயற்கை விருந்து
எல்லோரும் வாருங்கள் ருசித்து மகிழலாம்....!!