எங்கிருக்கிறாய்

நீ எனக்குள்
எங்கிருக்கிறாய்?
நான் எனக்குள்
கேட்டேன் .....

பார்க்கும் விழிகளும்
எழுதும் விரல்களும்
சொன்னது ....
நீ அங்கிருக்கிறாய்
என்று !

துடிக்கும் இதயமும்
சிரிக்கும் இதழ்களும்
சொன்னது ...
நீ அங்கிருக்கிறாய்
என்று !

நான் உன்னிடம்
கேட்கிறேன்

விநாடி கூட
விலகாத நீ
எனக்குள்
எங்கிருக்கிறாய் ?

எழுதியவர் : (22-Feb-14, 2:42 pm)
சேர்த்தது : saleeka
பார்வை : 76

மேலே